நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புதுப்பெண் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடகரையாத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவசண்முகம் என்பவர், கடந்த 7ஆம் தேதி தீபா என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து சிவசண்முகம், ராசாம்பாளையத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு, மனைவியுடன் விருந்துக்குச் சென்றார்.
அங்கு இருவரும் தங்கிய நிலையில், மறுநாள் தீபா 9 சவரன் நகை மற்றும் பணத்துடன் மாயமானார். இதனால் ஏமாற்றமடைந்த சிவசண்முகம், சகோதரியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பான விசாரணையில், தனது பெயரைத் தீபா என மாற்றி திருமணம் செய்து தலைமறைவான மதுரையைச் சேர்ந்த ஜோதிலெட்சுமி மற்றும் புரோக்கர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.