ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கும், அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவாவை சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரை ஏற்கப்பட்ட நிலையில் இரு தலைமை நீதிபதிகளையும் இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார்.
அதனடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான பட்டு தேவானந்தை அவரது சொந்த ஊரான ஆந்திராவின் உயர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி விவேக் குமார் சிங்கை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கும் மாற்றி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.