திருநெல்வேலி எம்.பி ராபர்ட் புரூஸுக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஜூலை 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
சொத்து மற்றும் வழக்கு விவரங்களை ராபர்ட் புரூஸ் மறைத்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ராபர்ட் புரூஸ் தரப்பில் நயினார் நாகேந்திரனிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அவர் சாட்சியம் அளித்தபின் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.