ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய நபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதித்துத் திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் வேலூர் கே.வி.குப்பம் பகுதியில் சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளித்த ஹேமராஜை கைது செய்து 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஹேமராஜ் குற்றவாளி என அறிவித்த நீதிபதி மீனா குமாரி, வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான முழு சிகிச்சை செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டுமெனத் தெரிவித்த நீதிபதி, பெண்ணுக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.