தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பகல் வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், இரவு நேரத்தில் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேபோல, நேற்றிரவு சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
விட்டு விட்டுப் பெய்த மழையால் சாலையோரங்களில் மழைநீர் தேங்கிய நிலையில், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை ஓட்டிச் செல்லும் நிலை ஏற்பட்டது.