கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிக்னலில் நின்றதற்காக உணவு டெலிவரி ஊழியரை 3 இளைஞர்கள் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவில் ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவரி ஊழியர் ஒருவர், நேற்றிரவு போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்தார்.
அவருக்குப் பின்னால் வந்த காரில் இருந்தவர்கள், சிக்னல் சிவப்பு நிறத்தில் இருந்தபோதிலும், ஹாரன் அடித்து, அவரை முன்னோக்கி நகருமாறு நெருக்கடி கொடுத்தனர்.
அதற்கு அந்த ஊழியர் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதாக விளக்கியபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் காரில் இருந்த 3 பேர் வெளியே வந்து, உணவு டெலிவரி ஊழியரை சரமாரியாக தாக்கி விட்டு, தப்பிச் சென்றனர்.