அதிமுக கூட்டணி 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி கடலூர் மாவட்டம் வடலூர் நான்குமுனை சந்திப்பில் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி பெஸ்ட் கூட்டணியாக இருக்கும் எனவும், 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் கூறினார்.
திமுக அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை 50 நாட்களாக மாற்றியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.