கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணாவின் பாரம்பரியத்தை நாம் சுமக்க வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை சார்பில் 7 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். தொடர்ந்து விழாவில், பாலமுரளி கிருஷ்ணாவின் இசையமைப்புகள் குறித்த குழுப் பாடல் மற்றும் பரதநாட்டியம் அரங்கேற்றப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் மூத்த கர்நாடக கிளாரினெட் வித்வான் கே.சி.நடராஜனுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி கௌரவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி பாலமுரளி கிருஷ்ணாவின் பாரம்பரியத்தை நாம் சுமக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.