கோவை மாஸ்டர் பிளான் திட்டத்தில் இடம்பெற்றுள்ள புதிய சாலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோவை – சத்தியமங்கலம் இடையே புதிதாகப் பசுமைச் சாலை அமைக்கவுள்ள தமிழக அரசின் முடிவிற்குத் தொடக்கம் முதலே மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே அண்மையில் கோவை மாஸ்டர் பிளான் என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தில், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சாலை திட்டம் இடம்பெற்றதால் அதிர்ச்சிக்குள்ளான அவர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.