கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளிச் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை வெறி தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
சொக்கம்பாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவர், இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் லிஃப்ட் கேட்டுள்ளார்.
மது போதையில் இருந்த அந்த நபர் சிறுவனைப் பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளார்.
அங்கிருந்து தப்பி சென்ற சிறுவனை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வசந்தகுமார் என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.