25 கிலோ எடை கொண்ட செவ்வாய் கிரக விண்கல் நியூயார்க்கில் நாளை ஏலத்தில் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பூமியில் இதுவரை கண்டெடுக்கப்பட்டதில் மிகப்பெரிய அளவிலான இந்த விண்கல் நியூயார்க்கில் ஏலத்துக்கு வருகிறது.
இந்த அரிய வகை மற்றும் தூய்மையான விண்கல் கடந்த 2023-ஆம் ஆண்டு நைஜரின் அகடெஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த செவ்வாய் கிரக விண்கல் இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாய் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.