போச்சம்பள்ளியில் 10 லட்சம் மா ஒட்டுச் செடிகள் தேக்கமடைந்துள்ளதாக நர்சரி பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட நர்சரி பண்ணைகள் இயங்கி வருகின்றன. அங்கு, விவசாய நிலங்களில் வளர்க்க கூடிய மா ஒட்டுச் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
நடப்பாண்டு மா விலை கடும் வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் மாற்றுப் பயிருக்கு மாறியுள்ளதாகவும், இதன் காரணமாக ஒட்டு மாஞ்செடிகளின் விற்பனை முற்றிலும் தடைப்பட்டுள்ளதாகவும் நர்சரி பண்ணையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
உற்பத்தி செய்து வைத்துள்ள 10 லட்சம் ஒட்டு மாஞ்செடிகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ள அவர்கள், ரேசன் கடை மூலம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இலவசமாக மாஞ்செடிகளை வழங்கி வாழ்வாதாரத்தைக் காத்திட வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.