காஞ்சிபுரம் அருகே உள்ள குமரக்கோட்டம் சுப்பிரமணியசாமி கோயிலில் ஆனி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு முருகப்பெருமான் வெள்ளி தேரில் பவனி வந்தார்.
கோயில் உட்பிரகாரத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் வள்ளி, தெய்வானையுடன் அவர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
அப்போது, பக்தர்கள் “அரோகரா அரோகரா ” கோஷங்களை எழுப்பியவாறு வெள்ளி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.