தாம்பரத்தில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையத்தில் தற்போது வரை பிரசவ வார்டு செயல்பாட்டிற்கு வரவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ரங்கநாதன் தெருவில் 2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் கட்டப்பட்டது. 9 ஆண்டுகளாகியும் இங்குப் பிரசவ வார்டு செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மருத்துவமனை கட்டடத்தில் உள்ள சோலார் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் பயனற்ற நிலையில் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, மாநகராட்சி ஆணைர் மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.