சங்கரன்கோவிலில் தனியார் பள்ளி வேன் விபத்துக்குள்ளானது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரைப் பள்ளியின் போக்குவரத்து மேலாளர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியார் பள்ளி வேன் கழிவுநீர் ஓடையில் சிக்கிக்கொண்டது. வேனில் இருந்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அதுதொடர்பான நிகழ்வுகளைச் செய்தியாளர் ஒருவர் ஒளிப்பதிவு செய்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பள்ளியின் போக்குவரத்து மேலாளர், செய்தியாளரை வீடியோ எடுக்கவிடாமல் தடுத்ததுடன், மீறி எடுத்தால் செல்போனை உடைத்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையே அனைத்து தனியார் பள்ளி வாகனங்களையும் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.