கடற்கரை, ஆறுகள் என இயற்கை எழில் கொஞ்சும் வியட்நாமில் காற்று மாசு அதிகரித்து வருவதால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அந்நாட்டின் ஹனோய் நகரில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அதன் தர குறியீடும் 161ஆக பதிவாகி ஆரோக்கியமற்ற நிலையை எட்டி வருகிறது. காற்று மாசு அதிகரிப்புக்கு அதிகப்படியான வாகன பயன்பாடு, திறந்த வெளியில் பயிர் கழிவுகளை எரிப்பதே காரணம் எனக் கூறப்படுகிறது.