அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியாவே கட்டமைக்கும் என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், விண்வெளி துறையில் உலகளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளதாகக் கூறினார்.
அடுத்த கட்ட விண்வெளி பயணங்கள் வர்த்தகரீதியாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியா அமைப்பதற்கான முன்னோட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடைபெறும் எனவும் கூறினார்.