ரஷ்யாவுடன் வர்த்தகம் புரிந்தால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு NATO பொதுச்செயலாளர் மார்க் ருட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது.
இந்த போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா, நேட்டோ அமைப்பு உதவி வருகின்றன.
இந்நிலையில் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வரும் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ருட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவது தொடர்ந்தால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் 100 சதவீத பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 3 நாட்டுத் தலைவர்களும் புதினுடன் தொலைப்பேசி வாயிலாக, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இல்லையெனில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் மார்க் ருட்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்கும் மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.