கோவை குண்டுவெடிப்பு குற்றம் சாட்டப்பட்டுள்ள டெய்லர் ராஜாவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
1998ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான டெய்லர் ராஜாவை, 28 ஆண்டுகளுக்குப் பிறகு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கடந்த 10-ம் தேதி கைதான டெய்லர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க, கோவை 5-வது குற்றவியல் நீதிமன்றத்தில், காவல்துறை தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் 21ம் தேதி வரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.