மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் 4 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
மதுரை மாநகராட்சியில் தனியார் வணிகக் கட்டடங்களுக்கு குறைந்த சொத்து வரி விதித்து, அரசுக்கு 200 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படுத்திய முறைகேட்டில், முன்னாள் உதவி ஆணையர் உட்பட 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், மாநகராட்சியில் பணியாற்றிய 5 மண்டலத் தலைவர்கள் மற்றும் 2 நிலைக் குழுத் தலைவர்கள், முதலமைச்சர் உத்தரவின்படி தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்த நிலையில் நேற்று மேலும் 4 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பில் கலெக்டர் காளிமுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஒப்பந்த ஊழியர்களான பாலமுருகன், நாகராஜன் மற்றும் மகா பாண்டியன் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.