ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் புஷ்ப பல்லக்கு சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது.
பல்வேறு வகையான மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கு வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கொட்டும் மழையிலும் நடைபெற்ற புஷ்ப பல்லக்கு சேவையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், நான்கு மாட வீதிகளில் காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு, கற்பூரம் ஆரத்தி எடுத்து மனமுருகி வழிப்பட்டனர்.