மதுரை மாவட்டம், சோழவந்தானில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலம் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
மேம்பாலம் திறக்கப்பட்டு 2 ஆண்டுகளே ஆன நிலையில் சாலைகள் ஆங்காங்கே பெயர்ந்தும், குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நேரிடுவதாக தெரிவித்த வாகன ஓட்டிகள் இந்த பாலத்தை பயன்படுத்த அச்சமாக உள்ளதாக குறிப்பிட்டனர்.
எனவே சாலையை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.