காமராஜர் குறித்து தான் பேசியதை விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என திமுக எம்.பி திருச்சி சிவா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் தன்மையில், தான் பேசியதாக விவாதங்கள் வலுத்துக் கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
காமராஜர் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விளக்கத்தினை எல்லோரும் அன்புகூர்ந்து ஏற்று, தன் உரையில் தான் கூறிய செய்தியினை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்வதாக திருச்சி சிவா கேட்டுக் கொண்டுள்ளார்.