மானநஷ்ட வழக்கில் டி.ஆர்.பாலு ஆஜராகதது ஏன்? என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், #DMKFiles வெளியானதும், இல்லாத மானம் போனதாகக் கூறி, திமுகவின் டி.ஆர் பாலு அவர்கள் மானநஷ்ட வழக்கில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானேன் என தெரிவித்துள்ளார்.
ஆனால், வழக்கம்போல டி.ஆர். பாலு, இன்று ஆஜராகவில்லை. இத்தனைக்கும், இன்றைய தினத்தைக் குறிப்பிட்டுக் கேட்டது அவர்தான் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
சாராய ஆலை நடத்தி விவசாயிகள் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கும் போது போகாத மானம், யாருக்கு கொடுத்தாலும், இவருக்கு மட்டும் மீண்டும் மத்திய அமைச்சர் பதவி தரமாட்டேன் என்று அன்றைய பிரதமரே கூறியபோது போகாத மானம், #DMKFiles வெளியானதும் போய்விட்டதா என்று, டி. ஆர். பாலு மனசாட்சி கேள்வி கேட்பதால், அவரே தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஆஜராவதைத் தவிர்த்துக் கொண்டிருக்கிறார் போலும் என அண்ணாமலை கூறியுள்ளார்.