மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சன்னதி தெருவில் உள்ள ஆபத்தான கட்டடங்களை அகற்றாத உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
முன்னதாக திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சன்னதி தெருவில் உள்ள கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது அங்குள்ள 11 பழமையான கட்டடங்கள் ஆபத்தானவை எனக் கண்டறியப்பட்டன. இதனையடுத்து கும்பாபிஷேகத்தின் போது அந்த கட்டடங்களில் பக்தர்கள் ஏற தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பாழடைந்த கட்டடங்களை அகற்றும் பணியைக் கிடப்பில் போடாமல் நடவடிக்கை எடுக்கப் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.