நூறுநாள் வேலைத் திட்டப் பயனாளிகளைக் கலைஞர் வீட்டுத் திட்டத்திற்குப் பயன்படுத்து தாகக் குற்றம்சாட்டிய பணியாளர்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சியில் மத்திய அரசின் திட்டமான நூறுநாள் வேலைத் திட்டத்தில் ஏராளமானோர் பணிபுரிந்து வரும் நிலையில், அனைத்து பயனாளிகளையும் கலைஞரின் வீட்டுத் திட்டத்திற்கு பணிபுரியக் கட்டாயப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்த பணியாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மேல்புறம் ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.