மதுரை அருகே எரித்துக் கொல்லப்பட்ட ஐடிஐ மாணவரின் உடலைப் பெற்றுக் கொள்ள மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒத்தக்கடை சுதந்திர நகரைச் சேர்ந்த பிரசன்னா என்பவர் தலையில் கல்லைப் போட்டுக் கொல்லப்பட்டு, பாதி எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த வழக்கில் அவருடன் பயின்ற சக மாணவர்கள் இருவர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்நிலையில் 2-வது நாளாக மறியலில் ஈடுபட்ட மாணவரின் உறவினர்கள், அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தினர். மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.