திருவண்ணாமலையில் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினரை வலுக்கட்டாயமாகக் கைது செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலால் அண்ணாமலையார் கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் சிரமப்படுவதாகக் கூறி அறநிலையத்துறையைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று மேடையில் உரையாற்றினர்.
அப்போது அங்கு வந்த போலீசார், அதிமுக நிர்வாகிகளை வலுக்கட்டாயமாகக் கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் கட்சி நிர்வாகிகள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.