தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 2 பேரை பட்டா கத்தியால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைலாசபட்டியில் பஞ்சர் கடை அருகே பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் 3 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் உயிருக்குப் பயந்து, வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொண்டனர்.
இதனையடுத்து, கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றைப் பட்டாக்கத்தியால் சேதப்படுத்தி விட்டு, அந்த கும்பல் தப்பிச் சென்றது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.