தென்காசி அருகே காமராஜர் பிறந்த நாள் விழாவின் போது பேருந்தின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை இறக்கிவிடாமல், ஓட்டுநர் வாகனத்தை வேகமாக இயக்கியதால் அவர்கள் அச்சமடைந்தனர்.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே கொண்டாடப்பட்டது. அப்போது இளைஞர்கள் சிலர் அரசு பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்டு அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்கத் தொடங்கினார். தொடர்ந்து இளைஞர்கள் பேருந்தை நிறுத்துமாறு கதறியதால் ஓட்டுநர் அவர்களை எச்சரித்து இறக்கிவிட்டார். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.