ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
டோக்கியோவில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தென் கொரியாவின் காங் மின் யுக்-கி டோங் ஜு ஜோடியுடன் மோதியது.
ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய ஜோடி 21-18, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.