கள்ளக்குறிச்சி அருகே ஒரே இரவில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்ற 21 வயது இளைஞர் நீண்ட நேரமாகியும் வயலுக்கு வராததால், அவரது தந்தை மாரிமுத்து வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, பாஸ்கர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
இது குறித்து தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, சங்கராபுரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இருவேறு பகுதியில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.