அமெரிக்காவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா திரும்பப் பெறப்படும் என்று அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாகத் திருட்டு, கொள்ளை, தாக்குதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனக் கூறப்பட்டுள்ளது.
அதோடு விசா ரத்து செய்யப்படும் என்றும், எதிர்காலத்தில் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான விசாவை பெறும் தகுதியை இழக்க நேரிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சட்டம் மற்றும் ஒழுங்கை வெளிநாட்டவர்களும் மதித்து, கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.