நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகே குளங்களில் இருந்து மண்ணை கடத்திச் சென்ற 100க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கனாபுரம் அருகே விவசாயப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் குளங்களில் இருந்து மண்ணை கடந்த 15 நாட்களுக்கும் மேலாகக் குமரி மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகளுக்குக் கடத்திச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இதனால் கொதிப்படைந்த விவசாயிகள், 100க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், தகவல் அறிந்து தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசிய ராதாபுரம் தாசில்தார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, லாரிகளை விடுவித்து, விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால், சங்கனாபுரம் பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.