ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களில் முறையே 104, 40 ரன்கள் விளாசிய ஜோ ரூட் 888 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
கேன் வில்லியம்சன் 2ஆவது இடத்திலும், ஹாரி ப்ரூக் 3ஆவது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சுப்மன் கில் ஆகியோர் முறையே 5, 8 மற்றும் 9ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.