தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்தால் தேர்தலில் தக்க பதில் கொடுப்போம் என திமுக அரசுக்கு டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட முயன்ற பகுதிநேர ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.