திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதானி காட்டுப்பள்ளி துறைமுக சமூக மேம்பாட்டுத் துறையின் மூலம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக மையம், கழிவறை ஆகியவை அமைக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வாயலூர், ஊரணம்பேடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின்றி தவித்து வந்தனர்.
இதே போல காட்டூர் அரசு மருத்துவமனையில் கழிவறை வசதிகள் இல்லாததால் கர்ப்பிணிகள் அவதிக்கு ஆளாகி வந்தனர். இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணச் சம்பந்தப்பட்ட கிராம தலைவர்கள், அதானி காட்டுப்பள்ளி துறைமுக நிர்வாகத்தை நாடினர்.
அதன் பேரில் அத்துறைமுகத்தின் சமூக மேம்பாட்டுத் துறையின் மூலம், சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு சுமார் 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அந்த வகையில் கட்டிமுடிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக மையம், கழிவறை ஆகியவற்றைத் துறைமுக தலைமை அதிகாரி செரியன் ஏபிரகாம் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
இதனால் 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயனடைவர் என்பதால் பலரும் துறைமுக நிர்வாகத்தின் செயலை பாராட்டி வருகின்றனர்.