மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் எதிரே 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது.
இந்த நீர்த்தொட்டியில் இருந்து கோயில் உதவி ஆணையர் அலுவலகம், சுகாதார வளாகம் உள்ளிட்டவற்றுக்குத் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், நீர்த்தேக்க தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களில் விரிசல்கள் ஏற்பட்டு வலுவிழந்து காணப்பட்டன.
நீர்த்தொட்டியின் பல இடங்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து இடிந்து விழும் அபாயத்தில் இருந்தது. இதனையடுத்து புதிய நீர்த்தொட்டி அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது.
அதன்படி, பத்ரகாளியம்மன் கோயில் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஊழியர்கள் இடித்து அகற்றினர்.