விவாகரத்து புரளிக்கு மத்தியில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சல் ஒபாமா இருவரும் பொதுவெளியில் ஒன்றாகத் தோன்றினர்.
பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகப் பங்கேற்காத நிலையில், இந்த விவாகரத்துப் புரளி விஸ்வரூபம் எடுத்திருந்தது.
இந்த நிலையில், மிச்சல் ஒபாமா தன்னுடைய சகோதரருடன் இணைந்து நடத்தும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில், ஒபாமாவும் தோன்றி பேசினார். அப்போது, இவர் எனது கணவர் என்று மிச்சல் அன்போடு கூறினார்.