கோவை மாவட்டம், வடவள்ளி அருகே நிலத்தகராறு காரணமாகப் பெண் ஒருவரை அவரது உறவினர் கற்களால் தாக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
சோமியம்பாளையத்தை சேர்ந்த கற்பகம் என்பவருக்குச் சொந்தமான 10 செண்ட் நிலத்தை அவரது உறவினர்களான ரங்கநாதன் என்பவர் வேலி அமைத்து ஆக்கிரமிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தடுப்பதற்காகக் கற்பகம் சென்ற நிலையில் அவர் மீது ரங்கநாதன் கற்களால் தாக்கினார்.
இதுதொடர்பாக புகாரளித்தும் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக அப்பெண் தெரிவித்த நிலையில் தாக்குதல் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.