இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களைச் சேர்க்க வலியுறுத்தி தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு மாற்றக் கோரி தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அடையாள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளிப்பவர்களுக்குத் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்போம் என அவர்கள் தெரிவித்தனர்.