அலாஸ்காவுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பின்னர் திரும்பப்பெறப்பட்டது.
போபோப் தீவில் உள்ள சாண்ட் பாயிண்ட் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சில பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு எச்சரிக்கை திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.