சேலம் வஉசி பூ மார்க்கெட் வியாபாரிகள் சாலையில் பூக்களைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் கடை வீதியில் உள்ள வஉசி பூ மார்க்கெட் வணிக வளாகத்தில் 120க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிய ஏலம் முறையைக் காரணம் காட்டி கடைகளின் மாத வாடகை உயர்த்தப்பட்டதற்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் அறிவித்திருந்தனர்.
இதனால், அந்தப் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்ட நிலையில், திடீரென பூக்களை சாலையில் கொட்டி வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த் துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும், பூ வியாபாரிகள் வணிக வளாகத்தில் உள்ள கடைகளை அடைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.