பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 120-ஐ கடந்துள்ளது,.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாகப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாகப் பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்கிறது.
இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இந்த நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிப் பலியானோரின் எண்ணிக்கை 124-ஆக உயர்ந்துள்ளது. வீடுகளை இழந்த பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.