தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சியில் காலதாமதமாக மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குலுக்கல் முறையில் வெற்றி பெற்று உமா மகேஷ்வரி என்பவர் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவியாகப் பொறுப்பேற்றார்.
அவர் மீது கடந்த ஜூன் 2-ம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதற்கு ஆதரவாக 28 நகர்மன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
அப்போது அவர் பதவியை இழந்ததாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, உமா மகேஸ்வரி மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மறைமுக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்பேரில் காலை 11 மணிக்கு மறைமுக வாக்கெடுப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்நிலையில் சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக வாக்கெடுப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறிய மகேஸ்வரி, கவுன்சிலர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, காலதாமதத்துடன் தேர்தல் நடத்தி ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 28 வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.