திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் சுமார் 5 மணிநேர விசாரணை மேற்கொண்டனர்.
திருப்புவனம் லாக்கப் கொலை வழக்கு தொடர்பாக, கடந்த 12ஆம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், 6 பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள், திருப்புவனம் காவல் நிலையத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். அப்போது, சம்பவத்தன்று பணியில் இருந்த காவலர்களை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் வெளியே அனுப்பப்பட்டனர்.
வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்ட அவர்கள், காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். சுமார் 5 மணிநேரத்திற்கு இந்த விசாரணை நீடித்தது.