3 வருட இடைவெளிக்குப் பிறகு சென்னை ஓபன் WTA250 சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுகிறது.
சென்னை ஓபன் WTA250 சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்-2025 போட்டி தொடரின் அறிவிப்பு நிகழ்ச்சி எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது இந்த தொடர் அக்டோபர் 27-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டது.
இந்த தொடரில் தரவரிசையில் முதல் 100 இடங்களில் உள்ள வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். சுமார் 2 கோடியே 39 லட்சம் ரூபாய் மொத்த பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பேசிய உதயநிதி, தமிழ்நாடு இந்தியாவின் முக்கியமான வளர்ந்த விளையாட்டு மையமாக திகழ்கிறது என தெரிவித்தார்.