மத்திய பிரதேச மாநிலத்தில் அதிக விஷம் கொண்ட பாம்புடன் ரீல்ஸ் எடுத்த பாம்பு பிடி வீரர் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
குணா மாவட்டத்தை சேர்ந்த பாம்புபிடி வீரரான தீபக் மஹாவர், பர்பத்புரா பகுதியில் கருநாகத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து பள்ளியில் இருந்து தனது மகனை அழைத்து செல்ல அழைப்பு வந்ததால் பாம்பை கழுத்தில் சுற்றியவாறு பள்ளிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்ததால் பாம்பை சீண்டி சீண்டி தீபக் மஹாவர் போஸ் கொடுத்தார். பிறகு மகனுடன் பைக்கில் வீடு திரும்பிய போது அவரது கையில் பாம்பு கடித்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆனால் இரவில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார்.