எரிபொருள் துண்டிப்புகளை விமானிகள் அணைத்ததாக விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் முதற்கட்ட அறிக்கையில், எந்தக் குறிப்பும் இல்லை என்று விமானிகள் கூட்டமைப்பு தலைவர் சிஎஸ் ரந்தாவா தெரிவித்துள்ளார்.
தரையிறங்கும் நேரத்தில், விமானி த்ரஸ்ட் ரிவர்சர்களைத் தேர்ந்தெடுத்தபோது, 2 என்ஜின்களும் மூடப்பட்டன, ஆனால் விமானி எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சை நகர்த்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
முதற்கட்ட அறிக்கையோ அல்லது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரோ இது விமானியின் தவறு என்று கூறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.