தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம் பிடித்துள்ளது.
உலகின் தூய்மையான நகரங்களுக்கான மிகப் பெரிய சர்வே ஒன்பதாவது ஆண்டாக இந்த ஆண்டும் நடந்தது. இதன்படி, 2024-25 ஆண்டுக்கான கணக்கெடுக்கும் பணி நடந்து முடிந்துள்ளது.
அதன்படி, மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது. 2-வது இடம் சூரத்திற்கும், 3-வது இடம் நவி மும்பைக்கும் கிடைத்துள்ளது.
இதேபோன்று இந்தியாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் மிகப்பெரிய நகரம் என்ற அந்தஸ்தைக் குஜராத்தின் அகமதாபாத் பெற்றுள்ளது. அதற்கான விருதுகளைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார்.